Date:

தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம் திறப்பு..!

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகத்தை நாளை மறுதினம் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகம் ஒரே நேரத்தில் 225 முதல் 250 பேர் வரை இருந்து உணவு உட்கொள்ள முடியும்.

இந்த உணவகம் நாளை மறுதினம் மாலை 7.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த உணவகம் பகல் மற்றும் இரவு உணவிற்காக திறந்திருக்கும்,

அதற்கமைய, சுழலும் உணவகம் மதிய உணவிற்காக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் இரவு உணவிற்காக மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த பார்வையாளர்கள் மூலம் 14 மாத காலப்பகுதிக்குள் 1025.9 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...