Date:

சாய்ந்தமருது மத்ரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள  மத்ரஸாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மாணவன் இன்று (6) மர்மமாக மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட மத்ரஸா பாடசாலைக்கு அம்பாறை சிறப்பு தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனின் விசாரணைக்குப் பின் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக பெற்றோர்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இதே வேளை, நேற்றிரவு கைதான  மத்ரஸா நிர்வாகி பாதுகாப்பாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் புலன்விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், குடும்பத்தில் மூத்தவரனான எனது மகன் கடந்த அக்டோபர் மாதம் 14ம் திகதி குறித்த மத்ரஸாவில் இணைந்ததாகவும் அவருக்கு மாதமொருமுறை 10 ஆயிரம் செலுத்தியதாகவும் இணைப்புக்கட்டணமாக ருபா 25 ஆயிரம் செலுத்தியதாகவும் 2 மாதம் கூட இன்னும் ஆகவில்லை.

மௌலவி தொலைபேசியூடாக மகனின் சடலத்தைக் காண்பதாகவும் கண்ணீர் மல்க சிறுவனின் தந்தையார் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

13 வயது சிறுவன் ஜனாஸாவாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மத்ரஸா நிர்வாகி கைது (photos)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...