Date:

சர்ச்சைக்குரிய மதபோதகரின் சிறை அறையில் மீட்கப்பட்ட பெருந்தொகை தொலைபேசி, சிம் அட்டைகள்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறைச்சாலை அறைகளில் 33 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 35 சிம் அட்டைகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, அண்மையில் இருந்து மெகசின் சிறைச்சாலை அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக உரிய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருந்து கவிழ்ந்து விபத்து : பலர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று...

கல்கிசை குழு மோதலில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

போர் அவளிடம் அழுவதற்கான சக்தியைக் கூட பறித்துவிட்டது

காசாவின் ஷேக் ரத்வான் பகுதியில், 6 வயது மிஸ்க் எல்-மெதுன் அமைதியாகக்...

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு முடிவு

மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு...