வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த யுவதி சடலமாக நேற்று(30) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் யுவதியின் சடலம், 5 கிலோமீற்றர் தொலைவில், வெலிப்பன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையை சேர்ந்த 24 வயது யுவதியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் யுவதியின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் நாயின் உதவியுடன் பொலிஸார் சடலத்தை கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஹிஜ்ரா மாவத்தையில் வசிக்கும் மொஹமட் அமீன் பாத்திமா அஸ்மியா என்ற குறித்த யுவதி கடந்த 27ம் திகதி இரவு முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தையின் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த விசாரணையில் அவர் பின்வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.