பஸ் ஒன்றில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடும் சிசிரீவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் திக்வெல்ல பிரதேசத்தில் பஸ்ஸில் ஏறியுள்ள நிலையில், அதே பஸ்ஸில் கந்தர பிரதேசத்தில் வைத்து மூன்று பெண்கள் ஏறியுள்ளனர் எனவும், இந்த திருட்டை அவர்களே செய்திருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இவ்வாறு தங்க நகைகளை அணிந்து பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் செல்லும் பெண்கள் கூடிய அவதானத்துடன் செயல்படுவதன் மூலம் இவ்வாறான சம்பவங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.