Date:

2022 O/L மாணவர்களுக்கான அறிவிப்பு!

2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகள் அச்சிடப்பட்ட பெறுபேறு சான்றிதழ், குறித்த அதிபர்களுக்கும் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு சான்றிதழ் பரீட்சார்த்திகளுக்கும் மீள் மதிப்பீட்டுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயன்பாட்டிற்கான பரீட்சை சான்றிதழ்களுக்கு இன்று (01) முதல் இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு நடத்தப்பட்டது.

3,568 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடத்தப்பட்டது.

இதற்கமைய, 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 78,103 தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...