சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்து வருவதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 68 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவை விட அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 60 ஆயிரத்துக்கும், 24 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 70, ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது தங்க விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.