Date:

ஆளுநர் பதவிகளில் எவ்வித மாற்றமும் இல்லை – வெளியான தகவல்

நீதிமன்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மத் கிழக்கு மாகாண, ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஹாபிஸ் நஸீர் அஹ்மதுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் அவருடைய பாராளுமன்ற பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஊவா மாகாண ஆளுநராக நியமித்து விட்டு, அதற்குப் பதிலாக ஹாபிஸ் நஸீரை கிழக்கு ஆளுனராக, ஜனாதிபதி நியமிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.

எனினும், அடுத்த தேர்தல் வரை கிழக்கு ஆளுநர் உள்ளிட்ட ஆளுநர் பதவிகளில் எவ்வித மாற்றமும் செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...

பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில்...

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...