மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இன்று (28) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கி உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
சம்பவம் தொடர்பில் தெளிவான விளக்கமொன்றை உரிய விசாரணைகளின் முடிவில் பெற்று, அதற்கு காரணமான தரப்பினரை வெளிப்படுத்த முடியும்.
தற்போது இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடியுள்ளதுடன், விசாரணைகள் நிறைவடைந்தவுடன் சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.