காஸாவின் சில பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதை உணர்த்தும் விதத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு சென்றார்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 50 நாட்களை கடந்துள்ளது. இதில் 4 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது அரசின் மூத்த அதிகாரிகள் சிலருடன் காஸாவிற்குள் நேற்று சென்றார்.
அங்குள்ள இஸ்ரேலிய வீரர்களிடம் நெதன்யாகு பேசினார். அப்போது அவர், “ஹமாஸ் இயக்கத்தை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும். எனவே ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்று உறுதியளித்தார்.
இதன்பின் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”ஹமாஸை முற்றிலும் வீழ்த்துவது, ஹமாஸ் பிடித்துள்ள பணையக்கைதிகள் அனைவரையும் மீட்பது, காஸா எந்த விதத்திலும் இனி தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வது ஆகியவையே இந்த போரின் இலக்கு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.