Date:

39 பாலஸ்தீனர்களுக்கு பதிலாக 24 பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த போரில் காசாவில் 14,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர், சுமார் 6 ஆயிரம் பேரை காணவில்லை என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கட்டார், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் போர் நிறுத்த முதல் நாளான வெள்ளிக்கிழமை 24 பெண்கள், 15 சிறுவர்கள் என மொத்தம் 39 பேரை இஸ்ரேல் விடுவித்தது.

இதற்கு ஈடாக 8 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

இந்த 24 பேரில் 13 இஸ்ரேலியர்கள் தவிர தாய்லாந்தை சேர்ந்த 10 பேர் மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்று கத்தார் தெரிவித்தது.

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்த போர் நிறுத்தம் வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது கட்டமாக ஹமாஸ் 14 பிணைக் கைதிகளையும் இஸ்ரேல் 42 சிறைக் கைதிகளையும் விடுவிக்க உள்ளதாக நேற்று மாலை தகவல் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் உணவின்றி 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு...

ரணிலின் தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில்...

வவுணதீவு படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சி.ஐ டி யினரால் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...