Date:

மதிய உணவு கொண்டு வந்த லஞ்ச் ஷீட்​டை சாப்பிட வைத்த அதிபர்..! ஏழு மாணவர்களுக்கு நடந்த கொடுமை

மதிய உணவை லஞ்ச் ஷீட் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும்   கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

பாதிப்புக்குள்ளான மாணவர்கள் இருவரும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

அந்த கல்லூரியில் 11ஆம் வகுப்பில் கல்வி பயின்று வரும் 07 மாணவர்கள் பகல் உணவுகளை லஞ்ச் ஷீட் மற்றும் செய்தித்தாள் பக்கங்களால் சுற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

மதியம் சாப்பிட்டுவிட்டு லஞ்ச் ஷீட் மற்றும் செய்தித்தாள் பக்கங்களை ஏழு மாணவர்களும் தங்களுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது ​​அவ்விடத்திற்கு வந்த அதிபர் அவற்றை வெளியே எடுத்து,  சாப்பிடுமாறு கூறியுள்ளார்.  அவர்கள் அனைவரும் லஞ்ச் ஷீட் மற்றும் பத்திரிக்கைகளை உண்டுள்ளனர்.

இதையடுத்து   ஏழு மாணவர்களில் ஒருவர் 21 ஆம் திகதியும் மற்றுமொரு மாணவன் 22 ஆம் திகதியும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை, நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...