கருப்பு ஜூலை குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்கும் யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

1983 கருப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்காக விசேட பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, அது தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்கவினால் இந்த யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதே கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பாக்ய ஸ்ரீ ஹேரத்தினால் அது உறுதி செய்யப்பட்டது.

 

 

 

கருப்பு ஜூலை சம்பவம் குறித்து முழுமையான ஆய்வு செய்து அறிக்கையிடுதல், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பில் தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதே இந்த விசேட குழுவின் நோக்கமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

வங்காள விரிகுடா தொடர்பில் நெடுநாள் மீன்பிடி மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடற்பரப்பு கொந்தளிப்பாக இருப்பது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலுக்கு பிணை

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம்...