Date:

பேராதனையில் மண்சரிவு – ஒருவர் பலி – 4 வர்த்தக நிலையங்கள் சேதம்!

கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் 4 கடைகள் மீது ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடையில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் நேற்று இரவே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்தில் இதற்கு முன்னரும் மண்சரிவு ஏற்பட்டதால், கடைக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஆனால், அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறாததால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அப்பகுதியில் பாதிப்புக்குள்ளாகும் கடைகள் உள்ளதாகவும், அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...