Date:

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் ஆணவ செயல் : கொந்தளிக்கும் கிரிக்கெட் உலகம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்ற நிலையில், அவுஸ்திரேலிய அணி இந்த தொடரை வெற்றிக்கொண்டது.

இந்தநிலையில், போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷசின் செயல் குறித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்ற பின்னர், அந்த கிண்ணத்தின் மீது சாதாரணமாக தனது கால்களை வைத்து ஓய்வெடுக்கும் அவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இதனை பலரும் ‘அவமரியாதை’ என்று முத்திரை குத்தியுள்ளனர்.

அணியின் தலைவர் பெட்  கம்மின்ஸால் பகிரப்பட்ட இந்தப் படம், விரைவாக பல்வேறு தளங்களில் பரவிய விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை வென்ற சிறிது நேரத்திலேயே இந்த புகைப்படம் வெளிப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...