Date:

ஹமாஸின் பிடியில் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பினால் பணய கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்பட்ட சுஜித் யடவர பண்டார என்ற இலங்கை பிரஜை உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலிலேயே சுஜித் யடவர பண்டார உயிரிழந்திருக்கலாம் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் சுஜித் யடவர பண்டார என்பதை உறுதி செய்துக்கொள்ளும் வகையில், அவரது பிள்ளைகளின் DNA மாதிரிகளை ஒத்துப் போவதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தினார்கள் என அவர் கூறினார்.

அன்னாரது பூதவுடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...