Date:

சுனில் பெரேரா காலமானார்

இலங்கை இசைத்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிரேஷ்ட இசை கலைஞர் சுனில் பெரேரா காலமானார். ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரான அவர் சிறந்த பாடல்களை வழங்கி நாட்டிலுள்ள சகலரது மனதிலும் ஆழமாக பதிந்தவர். நேற்று பிற்பகல் திடீர் சுகவீனமுற்ற நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுனில் பெரேரா இன்று அதிகாலை காலமானார்.

கடந்த 1952ம் ஆண்டு செப்டம்பர் 14ம் திகதி பிறந்த அவர் மரணிக்கும் போது 68 வயதாகும். கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அண்மையில் வீடு திரும்பியிருந்தார். எனினும் மீண்டும் சுகவீனமுற்றதையடுத்து கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபடார். தீவர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமாகியுள்ளார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையின் இசைக்குழு நிகழ்ச்சிகளில் புரட்சிகளை ஏற்படுத்தியதுடன், இசை துறைக்கு பிரபலமான பாடல்களை வழங்கிய பாடகர் சுனில் பெரேராவின் மறைவிற்க இரங்கல் தெரிவிப்பதாக ஜனாதிபதி தனது பதிவில் குறிபிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். இலங்கையின் இசை துறையில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கிய சுனில் பெரேரா தான் சார்ந்த கொள்கையுடைய கருத்துக்களை அச்சமின்றி வெளியிட்டவர். இலங்கை இசைமேடையில் சுனில் பெரேராவின் வெற்றிடம் ஈடு செய்ய முடியாத இடைவெளியாகவே காணப்படும். அவரது ஆத்மா சாத்தியடையவேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராபஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காஸா சிறுவர் நிதியம் – மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபா அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை...

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஆளுநர் நசீர் அஹமட்

      வடமேற்கு மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்...

இலங்கையின் வீசா கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டள்ள குற்றச்சாட்டு

ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை...

கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு?

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க...