பாடசாலை மாணவர்களுக்கு அரச அச்சக திணைக்களத்தின் ஊடாக 30 வீத சலுகை அடிப்படையில் அப்பியாச கொப்பிகளை இன்று (02) முதல் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என அதன் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவிக்கின்றார்.
தமது பிரதான அலுவலகம் மற்றும் திணைக்களத்தின் விற்பனை நிலையங்களில் இந்த சலுகைகள் அடிப்படையிலான கொப்பிகளை கொள்வனவு செய்ய முடியும் என அவர் கூறினார்.
பாடசாலை அதிபர்களின் கையொப்பத்துடனான கடிதங்களை கொண்டு வரும் பிரதிநிதிகளுக்கு கொப்பிகள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.