Date:

அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் கோரத் தாக்குதல்: அதிகரித்துள்ள உயிரிழப்புகள்

ஜபாலியா அகதிகள் முகாமின் மீது  இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜபாலியா அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளது என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 120 பேரை இன்னும் காணவில்லை என்றும், 777 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

மேலும், அழிவின் அளவைக் கருத்தில் கொண்டு போர்க்குற்றங்களுக்கு சமமாக இதனை கருதுகிறோம் எனவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, காசாவை சேர்ந்த ஆயிரம் குழந்தைகளுக்கு ஐக்கிய அரபு அமீரக வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...