அமேசான் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மற்றொரு வெற்றிகரமான வருடாந்திர ஒன்றுகூடல் மற்றும் வெளிக்கள நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தர்கா நகரில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது .
இந்த நிகழ்வின் போது விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வலுவூட்டும் விதமான கற்றல் செயற்பாடுகளும் பல்வேறு விதமான கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன.
அமோசன் கல்லூரியில் கற்பித்து கொடுப்பவர்களின் திறன்களை மேலும் விருத்தி செய்யவும் சிறந்த ஆளுமையுள்ள நிர்வாக குழுவை மேலும் வலுவூட்டுவதற்காகவும் வருடாந்தம் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கல்லூரியின் தலைவர் இல்ஹாம் மரிக்கார் விரிவுரையாளர்கள் ,முகாமைத்துவ ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது