Date:

இலங்கையில் தொடரும் மோசமான காலநிலை – பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேநேரம் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

இதேவேளை, நில்வலா ஆற்றின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 3 முதல் 24 மணித்தியாலங்களில் பின்வரும் பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வளா கங்கை கசிவுப் பாதைக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.

இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...