பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

 

 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை குறித்த அறிக்கை வௌியானது

.   நாடு முழுவதும் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பிலான பூர்வாங்க விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு...

அஸ்வெசும தகுதி பெறாதவர்களுக்கு மேன்முறையீடு செய்ய அவகாசம்

அஸ்வசும' நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.       அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள்...