Date:

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி..! 18 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்கும் செயலமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்கட்டண திருத்தம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை வாய்மொழியாக பெறும் செயற்பாடு நேற்று(18) முதல் இடம்பெறுகின்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முற்பகல் 9 மணிமுதல் இந்த செயற்பாடு ஆரம்பமானதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த தரவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதால், மின்கட்டணத்தை மீள மதிப்பிடுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

இதன்படி, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் இதற்கான பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மின்சார கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் குறித்த கடிதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழு அறிக்கையை ஆராய நால்வரடங்கிய குழு நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக்...

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்பட மாட்டது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை...

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை – திகதி அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல்...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373