காசா பகுதியில் உள்ள வைத்தியசாலைமீது நடத்தப்பட்டுள்ள குண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 500 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை உலக நாடுகள் கண்டித்துள்ளன.
வடக்கு காசாவில் தாக்குதல் நடத்துவதற்காக அங்குள்ள மக்களை தெற்கு காசாவுக்கு இடம்பெயரும் படி இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தியதன் பேரில் லட்சக்கணக்கான மக்கள் தெற்கு காசாவில் அடைக்கலம் புகுந்தனர்.
இந்த சூழலில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீதும் குண்டுகளை வீசின. தெற்கு காசா நகரங்களான ரபா மற்றும் கான் யூனிசில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி வைத்தியசாலையில் 500 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் ரபாவில் 27 பேரும், கான் யூனிசில் 30 பேரும் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தம்மால் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.