Date:

அடுத்தடுத்து பதவி விலகும் உயர் அதிகாரிகள்! பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நடப்பது என்ன..?

இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும்  உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விற்பனை மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிவந்த  தலைவர்கள் உட்பட பல அதிகாரிகள் தமது பதவியை  இராஜினாமா செய்து வருகின்றனர்.

மேலும் இவ்வாறு இராஜினாமா செய்தவர்களில்  பெரும்பாலானோர் வேறு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச்  சென்றுள்ளனர் எனவும்  கூறப்படுகின்றது.

இதன்காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய சிக்கல்  ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், வெற்றிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிலையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நல்லூர் கந்தனை தரிசித்தார் பிரதமர்

இருநாள் உத்தியோகபூர்வ பயமாக யாழ் வருகை தந்த இலங்கை நாட்டின் பிரதமர்...

இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம்...

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...