இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்துள்ள பயணத்தடையை நாளை மறுதினம் முதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்டா கொவிட் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருந்தது.
பயணத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டுக்கு வருபவர்கள் இரண்டு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.