Date:

இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு

இஸ்ரேலின் வடக்கில் லெபனான் மற்றும் சிரியாவிற்கும் அருகில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அந்த பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் உரிய முறையில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

லெபனான் மற்றும் சிரியாவுக்கு அருகாமையில் உள்ள நஹாரியா, அகோ, ஹைஃபா, திபெரியா, நசரித் ஆகிய கிராமங்களுக்கு அருகில் தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இஸ்ரேல் அரசாங்கம் பாதுகாப்புப் படையினரை அந்தப் பகுதிக்கு அனுப்பி, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், காசா பகுதியின் வடக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களை தெற்குப் பகுதிகளுக்கு வெளியேற்ற இஸ்ரேல் அரசு 24 மணிநேர அவகாசம் அளித்துள்ளது.           

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள...

நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன்! – நியூயோர்க் மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது...

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான்...