படங்கள் கொழும்பு நிருபர் – நசார்
கொழும்பில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தினால் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலாக சட்டவிரோதமாக வேறு சில பொருட்களை இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள் சுங்க வருவாய் அதிகரிகளினால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதியாளரால் சுங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சுங்க அறிவிப்பின்படி, அதில் உள்ள பொருட்களாக 25,000 கிலோ கொண்டைக்கடலை, அதில் 833 சாக்கு மூட்டைகள் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கான வரியாக 125,000 ரூபாய் மாத்திரமே வரியாக செலுத்தப்பட்டிருந்துள்ளது.
ஆனால், இலங்கை சுங்க வருவாய் மேற்பார்வைப் படை அதிகாரிகளின் சந்தேகத்தின் பேரில் கொள்கலனை பிடித்து முழு ஆய்வு செய்ததில் தெரிவிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு மேலதிகமாக 230 மூடை கொண்டைக்கடலை, தலா 30 கிலோ கொண்ட 585 சாக்குகளில் 17550 கிலோ உழுந்து அடைக்கப்பட்டிருந்தது.
இறக்குமதி ஏற்றுமதி சுங்ககட்டுப்பாட்டாளர் குறித்த இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்துள்ளார்.
இந்தப் பங்கின் சந்தைப் பெறுமதி சுமார் 31 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW