யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹோலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் இலங்கையில் இருந்து புனித உம்ரா கடமைகளை நிறைவேற்ற செல்பவர்களுக்கான விசேட சலுகை கட்டணத்தை அறிமுகம் செய்தது.
கடந்த பல வருடங்களாக புனித ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளை வழங்குவதில் தனக்கான தனி இடத்தை பெற்று முன்னணி நிறுவனமாக யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹோலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் திகழ்கின்றது.
அந்தவகையில் இந்த மாதம் உம்ரா கடமையை நிறைவேற்றவுள்ளவர்களுக்கான முன்னாயத்த நிகழ்ச்சியை கடந்த 08 ஆம் திகதி பிரபல தனியார் ஹோட்டலில் நடத்தியது.
நிகழ்ச்சியானது இலங்கை உம்ரா வரலாற்றில் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகின்றது. இத்தனை காலமும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்களுக்கே இவ்வாறான நிகழ்வு இடம் பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக புனித உம்ரா கடமையை நிறைவேற்ற உள்ளவர்களுக்கு இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த உம்ரா குழுவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு பல்வேறு குழுக்களை உம்ராவிற்கு அனுப்பியுள்ளதோடு நடுத்தர குடும்பத்தினருக்குக்கு உம்ரா பாக்கியம் கிடைக்கவேண்டும் என்ற நோக்குடன் அனைவருக்கும் உம்ரா என்ற கருத்திட்டத்திற்கு அமைய 3 லட்ச்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு தனது உம்ரா கட்டணத்தை அறிவித்தது.
மக்கா மதீனாவில் விசேட தளங்களை பார்வையிடுவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், சிறிலங்கன் விமான சேவை மூலம் நேரடி பயணத்துடன் 12 நாட்கள் இரு ஜூம்ஆ தொழுகை கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW