உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Dasun Shanaka தலைமையிலான இலங்கை அணி, Babar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை இன்று (10) எதிர்கொள்ளவுள்ளது.
ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
உலக் கிண்ண முதலாவது போட்டியில் போராடி தோற்ற இலங்கை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நோக்குடன் களமிறங்குகிறது
அத்துடன் பாகிஸ்தான் நெதார்லாந்து அணியுடனான தனது முதலாவது வெற்றியினை தொடர்ந்து இன்று இலங்கையுடன் மோதவுள்ளமை குறிப்பிடதக்கது.