Date:

இலங்கையின் பிரபல நடிகர் காலமானார்..!

இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் எண்டனி தனது 62ஆவது வயதில் இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை காலமானதாக குடும்ப உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அனுராதபுரம் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த வாகனம் யானை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஜெக்சன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 14 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் இன்று அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

நடிகராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும், எழுத்தாளராகவும், அறிவிப்பாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்திய அவர் இந்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் செயற்பட்டுள்ளார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன தேசத்தை ஆதரிக்கிறேன், பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டனின் முடிவை வரவேற்கிறேன்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் உமா...

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...