Date:

கலாநிதி இல்ஹாம் மரிக்காரின் அனுசரனையில் புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு ஜேர்ஸி வழங்கி வைப்பு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் உதைப்பந்தாட்ட போட்டி இம்முறை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு அரங்கில் வெகு விமரிசையாக 30 செப்டெம்பர் 2023 மற்றும் 1 ஒக்டோபர் 2023 ஆம் திகதிகளில் நடைப்பெறவுள்ளது.

மேற்படித்தொடரில் புத்தளம் அங்கத்துவ வை.எம்.எம்.ஏ கிளை சார்பான வீரர்களுக்கான ஜேர்ஸிக்களை CBS foundation அமைப்பின் ஸ்தாபகரும் , அமேசன் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரிக்கார் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மலேசியாவில் சாதனைப்படைத்த
சர்வதேச ரீதியிலான மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்ற ஆசிரியர் M. F. M. Humayoon, 200M ஓட்டப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ஆசிரியர் M. F. M. Thufail ஆகியோருக்கான கௌரவிப்பு I soft கல்லூரியில் இன்று (2023-09-28) நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் புத்தளம் வை.எம்.எம்.ஏ மாவட்ட பணிப்பாளர் ஆசிரியர் எம்.டீ.எம் நபீல் , மரண விசாரணை அதிகாரியும் , மத்தியஸ்த சபை உப தலைபர்.பீ.எம் ஹிசாம், வை.எம்.எம்.ஏ கிளையின் பொறுப்புதாரியும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபை அதிகாரி முஜாஹித் நிசார் , I soft கல்லூரியின் பணிப்பாளரும் , கல்வியாளருமான அப்ராஸ் ஆசிரியர், புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும், புத்தளம் தள வைத்தியசாலையின் முகாமைத்துவ உதவியாளருமான ஜவ்ஸி ஜதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...