நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரத்தம்’ திரைப்படம் அடுத்த மாதம் 6 ஆம் திகதி திரைக்கு வருகிறது.
இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், தன் இளைய மகள் லாராவுடன் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார்.
பின், அவர் கலந்துகொண்ட நேர்காணல்கள் வெளியாகின.
அதில், விஜய் ஆண்டனி, “வாழ்க்கையில் அடுத்தது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. என் வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்து விட்டேன்.
இப்போது, வலிகளுடன் வாழப் பழகிக்கொண்டேன், இழப்புகளின் மூலம் நிறையக் கற்றுக்கொண்டேன்” என உருக்கமாகக் கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா அண்மையில் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.