Date:

தீக்குச்சியால் குழந்தையின் வாயில் சுட்ட தாய் கைது

தனது மூன்று வயதுக் குழந்தையின் வாயில் தீக்குச்சியை பற்றவைத்து சுட்ட தாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தியுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குழந்தையின் மேல் உதட்டில் தீக்காயங்களின் அடையாளமும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தகாத வார்த்தைகளை கூறியதால், நிறுத்தும்படி பயமுறுத்துவதற்காக, தீக்குச்சியைக் கொளுத்தி, தனது பிள்ளையின் வாயில் நெருக்கமாக வைத்திருந்ததாக சந்தேகநபர் கூறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது குழந்தையின் மேல் உதடு எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் 118 அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் திவுலப்பிட்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு குழந்தை தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்ததுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அந்தக்குழந்தையின் தாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கல்கிசை குழு மோதலில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

போர் அவளிடம் அழுவதற்கான சக்தியைக் கூட பறித்துவிட்டது

காசாவின் ஷேக் ரத்வான் பகுதியில், 6 வயது மிஸ்க் எல்-மெதுன் அமைதியாகக்...

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு முடிவு

மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு...

விமர்சிக்கப்பட வேண்டியது சவூதியா?

  எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.   சமகாலத்தில் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வு...