Date:

பிக் பாஸ் 7ல் களமிறங்கும் விஜய் பட நடிகர்

பிக் பாஸ் 7 தான் தற்போதைய சின்னத்திரையின் ஹாட் டாப்பிக். இதில் யார்யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தினம்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது.

ரவீனா, ஜோவிகா, தர்ஷா குப்தா, குமரன், இந்தரஜா, விஷ்ணு, சத்யா, அனன்யா, மூன்நிலா, பப்லு பிரித்விராஜ் உள்ளிட்டோர் தான் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது புதிய போட்டியாளர்கள் இருவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த விஜய் வர்மா என்பவர் பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள இருக்கிறாராம். இவர் ஒரு நடன கலைஞர் ஆவார்.

மேலும் கடந்த பிக் பாஸ் 5ல் கலந்துகொண்ட நடிகை தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதி பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் வரும் அனைவரும் கண்டிப்பாக பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள போகிறார்களா என்று தெரியவில்லை. இந்த வாரம் இறுதியில் தெரிந்துவிடும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் 20 போட்டியாளர்கள் யார் யார் என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...