Freedu என்பது ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இலவச உயர் கல்வியை அனைவருக்கும் வழங்கும் நோக்கத்துடன் இயங்கி வருகின்றது.
கல்வியில் முன்னேற, அவர்களின் அறிவை விரிவுபடுத்த அல்லது புதிய திறன்களை வளர்க்க விரும்பும் அனைவருக்கும் கல்வி வாய்ப்புகளை வழங்கி இலவச கல்வி மானியங்கள் மற்றும் உதவித்தொகைகளை எளிதாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
தேசிய தொழிலாளர் ஆய்வு நிறுவனத்தில் இடம் பெற்ற Freeduவின் ஆரம்ப நிகழ்வின் போது இந்நிறுவனம் சுகாதார நல முகாமைத்துவ சான்றிதழ் கற்கை நெறி ஒன்றை வழங்கியது. இந்த முதல் முயற்சியில் வைத்தியர் ரந்திக குணத்திலக்க இந்த சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக எல்மோ பெரேரா செயற்படுகின்றார். இவர் தனது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பங்களிப்புச் செய்கின்றார்
தனுர கமகே சந்தைப்படுத்தல் இயக்குனராகப் பணியாற்றுகின்றார். இவர் இந்நிறுவனத்தின் முன் முயற்சிகளை தொடரும் அதே வேளை நிறுவனத்தின் நிதி முகாமைத்துவ செயற்பாடுகளை உறுதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது Freeduஆனது கல்வி தொழில் நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெரேரா தெரிவித்தார்