Date:

கொழும்பு ஹோட்டல் கட்டணங்கள் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்டப்டுள்ளது.

அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விலைகளை அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான சுற்றுலா ஹோட்டல் அறைக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐந்து நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 100 அமெரிக்க டொலர்களும் நான்கு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 75 அமெரிக்க டொலர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மூன்று நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 50 அமெரிக்க டொலர்களும், இரண்டு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 35 அமெரிக்க டொலர்களும், ஒரு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு 20 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த விலைகள் 24 மணிநேர காலத்திற்கு செல்லுப்படியாகும். மேலும் சேவைக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் அல்லது வழங்கப்பட்ட பிற சேவைகள் அல்லது வசதிகளுக்கான கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்காது.

இதற்கு மேலதிகமாக ஹோட்டல்களில் வசிப்பவர்களுக்கான உணவு விலைகளையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, ஐந்து நட்சத்திர சுற்றுலா விடுதியில் ஒருவருக்கு காலை உணவாக 10 அமெரிக்க டொலர்களும், மதிய உணவிற்கு 15 அமெரிக்க டொலர்களும், இரவு உணவிற்கு 17 அமெரிக்க டொலர்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலுக்கு, காலை உணவுக்கு 9 அமெரிக்க டொலர்கள், மதிய உணவுக்கு 14 அமெரிக்க டொலர்கள் மற்றும் இரவு உணவிற்கு 16 அமெரிக்க டொலர்கள் என விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...