Date:

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த பெரும் ஆபத்தான பொருள்

பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் பெரும் ஆபத்தான ஹஷிஸ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

16.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளையே ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

வென்னப்புவ, ஹலவத்த பகுதியில் உள்ள முகவரிக்கு குறித்த பொதி அனுப்பப்பட்டுள்ளதுடன் அதில் ஒரு கிலோ 98 கிராம் எடையுடைய ஹஷிஸ் இருந்ததாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொதி அனுப்பப்பட்ட முகவரி தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது முகவரி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை  கைது செய்யப்படவில்லையெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஹஷிஸ் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...