Date:

“கல்வி என்ற தடுப்பூசியை குழந்தைகளுக்கு கொடுத்தால், நாடு தானாக வளரும்” – தம்மிக்க பெரேரா

இலங்கையர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், தொடர்பாடல் மற்றும் சிந்தனைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் வாய்ப்புகளை முழுவதுமாக உள்ளடக்கும் நோக்கத்துடன் திரு.தம்மிக்க பெரேரா “DP கல்வி” திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இத்திட்டத்தின் 61வது நிலையமானது அநுராதபுரம் நகரிலுள்ள வீரசேகரராம ஸ்ரீ பாரதிந்திர மகா பிரிவேன் வித்யாதனயவை மையமாக கடந்த ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

40 நவீன கணனிகள் பொருத்தப்பட்ட இந்த நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் பாடநெறிகளை பூர்த்தி செய்த 100 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாடும் கல்வியறிவின்றி வளர்ச்சியடையவில்லை. படிப்பறிவில்லாதவர்களைக் கொண்டு எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை.

இந்த கல்வி என்ற தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடும்போது நாடு தானாக உயரும். எனக்கும் இந்த நாட்டை உயர்த்த வேண்டும் என்று

டி.பி. கல்வி நிறுவனத்தின் தலைவர் திரு.தம்மிக்க பெரேரா சிறப்புரை ஆற்றினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...