Date:

30 மாணவர்கள் திடீரென மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த  போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 30 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...