நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா விஜய் ஆண்டனி, 12ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த நிலையில் இன்று காலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று (18) சம்பவ நேரத்தில் உறங்கச் சென்ற அவர் அதிகாலை 3 மணி அளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தின்போது நடிகர் விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என தெரிவிக்கபப்டுகிறது.
அவர் கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.