
தற்போது காணப்படும் பாடசாலை நேர அட்டவணையை இதுவரையிலும் வழமைக்கு கொண்டு வர முடியவில்லை என இலங்கை அரச ஆசியரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் செஹான் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் (17.09.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பரீட்சைகளை நடத்த வேண்டும். இந்த வருடத்துக்கான பாடத்திட்டம் அடுத்த வருடம் வரை கொண்டு செல்லப்படுகிறது.
இதன் காரணமாக பாடசாலை பரீட்சைகள் தாமதமாக நடத்தப்படுகின்றது.
முதல் முறை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இரண்டாவது முறையாகவும் பரீட்சைக்கு தோற்றுவார்களாயின் அவர்களுக்கு சிறிய இடைவேளை ஒன்று வழங்கப்பட வேண்டும்.
பரீட்சைத் திணைக்களம் உரிய முறையில் பரீட்சைகளை திட்டமிட்டு நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.


                                    




