இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்று (27) ஐந்தாவது போட்டி இடம்பெறவுள்ளது.

 

 

இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

 

 

 

லாஹூரில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

 

 

அதற்கமைய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடவுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி இந்த தொடரில் தாம் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளதுடன் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் பெற்றுள்ளது.

 

இலங்கை அணி ஒரு போட்டியில் இதுவரை வெற்றி பெற்றுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்வதற்கு இன்றைய போட்டி இலங்கை அணிக்கு முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலங்கையின் வரலாற்றுச் சாதனை: குமார் சங்கக்கார பாராட்டு!

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை...

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய...