அநுரவின் வாழ்த்துக்கு பதிலளித்த பிரேசில் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துகளுக்கு பிரேசில் ஜனாதிபதி லுாலா ட சில்வா (Lula da Silva) பதிலளித்துள்ளார்.

 

 

தனது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ள பிரேசில் ஜனாதிபதி, இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இந்தியாவில் வைத்து அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கக் கிடைத்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அத்துடன், இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் எதிர்பார்ப்பதாகப் பிரேசில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

நான்காவது முறையும் பிரேசிலின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி லூலா ட சில்வாவின் தேர்தல் வெற்றிக்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது X தளத்தில் பதிவொன்றையிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

 

 

தவறான தகவல்கள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை பிரேசில் மக்கள் தங்களது வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளதாகவும், அதுவொரு மகத்தான வெற்றி என்றும் பிரேசில் ஜனாதிபதிக்கு, அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சவுதி தலைநகரில் அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் பல வெடிப்புகள் சம்பவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   அங்கு குறைந்தது மூன்று வெடிப்புகளாவது இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு...

குவைத்தில் இலங்கை பெண்கள் இருவர் மர்மமாக உயிரிழப்பு – விசாரணை ஆரம்பம்

குவைத்தின் இரு வெவ்வேறு பகுதிகளில் இலங்கை பெண்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.     அலி...