Date:

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் இலங்கையின் புதிய வேகப்பந்து வீச்சாளர்

எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் (Rangpur Riders) அணிக்காக இலங்கையின் புதிய வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன (Matheesha Pathirana) விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ள 2024 BPL போட்டியில், மதீஷ தனது சக வீரர் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) , நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) மற்றும் பாபர் ஆசம் (Babar Azam) போன்ற வீரர்களுடன் ரைடர்ஸ் அணிக்கு பங்களிப்பார்.

2012ஆம் ஆண்டு தொடங்கிய பிபிஎல் போட்டி இதுவரை 9 முறை நடத்தப்பட்டு, ரங்பூர் ரைடர்ஸ் அணி ஒருமுறை (2017ஆம் ஆண்டு) சாம்பியன் பட்டத்தை வென்றது.

ரங்பூர் ரைடர்ஸ் அணியில் மதீஷ உள்வாங்கப்பட்டதை தொடர்ந்து சமூக ஊடகங்களில், அவரை “பேபி மலிங்க” (“Baby Malinga”)என்று அழைக்கின்றனர்.

தற்போதைய பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) தலைமையிலான ரைடர்ஸ் அணியில் பங்களாதேஷ் வீரர்களான நூருல் ஹசன் சோஹன் (Nurul Hasan Sohan), ஷேக் மஹேதி ஹசன் (Mahedi Hasan) மற்றும் ஹசன் மஹ்மூத் (Hasan Mahmud) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இந்த அணியும் மற்ற BPL அணிகளும் இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் BPL பிளேயர் டிராப்டில் அதிக வெளிநாட்டு வீரர்களை தங்கள் அணிகளில் ஈடுபடுத்தும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள ILT20, SA20 மற்றும் BPL தொடர்களின் நேரங்கள் காரணமாக வீரர்கள் சில அசௌகரியங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373