Date:

பதவி விலக தயாராகும் பந்துல ?

“புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்திடமிருந்து நான் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக புகையிரத சேவை சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்திக தொடங்கொட என்பவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு”

இவ்வாறு போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் காரியாலயத்தில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“புகையிரத சாரதிகள் சங்கத்தில் ஒரு தரப்பினரை தூண்டி விட்டு அவர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வைத்த இந்திக தொடங்கொட புகையிரத சேவை சங்கத்தில் எவ்வித பதவிகளையும் வகிக்கவில்லை.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு அடிபணியாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தவுடன் இந்திக தொடங்கொட என்னை கடுமையாக சாடியுள்ளார்.

இலங்கை அரசியலில் என்னை போல் (பந்துல குணவர்தன) மிக மோசமான போக்குவரத்து அமைச்சர் எவரும் இல்லை என்றும், நானும் எனது மனைவியும் தம்பதிவ யாத்திரை செல்ல வெளிநாட்டு தரப்பினர் நிதியுதவி வழங்கியதாகவும் புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனது வீட்டுக்கு வந்து 5 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்களின் திணிப்பு என்பதுடன் வன்மையாக இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் தான் இவர் இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

புகையிரத சாரதிகள் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சு மற்றும் புகையிரத திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புகையிரத சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தேன்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு போக்குவரத்து அமைச்சினால் மாத்திரம் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது.

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் தான் முரண்பட்ட வகையில் தீர்வு காண முடியும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தேன்.

இவ்வாறான நிலையில் தான் புகையிரத சாரதிகள் சங்கத்தினர் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் 84 பேரின் பணிப்புறக்கணிப்பினால் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையவில்லை.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னின்று செயற்படுத்திய இந்திக தொடங்கொட எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புகையிரத சேவையில் உள்ள இந்திக தொடங்கொடவுக்கு எதிராக மேலதிக கொடுப்பனவில் மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சு மட்டத்திலும்,மிலேனியம் புகையிரத செயற்திட்ட மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தான் இவர் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சராக நான் பதவியேற்றதன் பின்னர் இந்திய நிறுவனத்துடன் எந்த அபிவிருத்தி திட்ட ஒப்பந்தங்களையும் முன்னெடுக்கவில்லை.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படுகிறது.

அத்துடன் நிதி விவகாரங்கள் இந்திய நிதியமைச்சுக்கும்,இலங்கையின் நிதியமைச்சுக்கும் இடையில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது.

5 கோடி ரூபா நட்டஈடு பெற்றதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக குற்றப்புலனாய்வு, பிரிவிலும்,இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடளிப்பேன்.

அதே போல் இலங்கையில் புகையிரத பாதை புனரமைப்பு செயற்திட்டத்தில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிக்க வேண்டும்.

என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதுடன்,முழு அரசியல் செயற்பாடுகளிலும் இருந்து விலகுவேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

தற்போது வீதிக்கு இறங்க தயாரா? – கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373