Date:

ரயில் இயக்குநர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் – சேவைகளுக்கு பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இயக்குநர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10க்கும் அதிக அலுவலக மற்றும் ஏனைய ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு ரயில் இயக்குனர்கள் சங்கத்திற்கும், ரயில் முகாமையாளருக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த பேச்சுவார்த்தை தோல்விடைந்தமையினால், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு ரயில் இயக்குனர்கள் சங்கம் தீர்மானித்தது.

சுமார் 5 வருடங்களாக தாமதமாகிவரும் தரம் உயர்வை விரைவுபடுத்துமாறு கோரி வந்த போதிலும், அதற்கான உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை

மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று (12) 24...

பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர்...

வெடித்து சிதைந்த சி-130 விமானம் – 20 பேர் உயிரிழப்பு!

துருக்கி இராணுவத்துக்கு சொந்தமான சி–130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில்...

அரசுக்கு எதிரான பேரணியில் இருந்து விலகிய மரைக்கார்

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள்...