சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட இப்பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மேலதிக 40 வாக்குகளால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக்கட்சிகளும் ஆதரவாக வாக்களித்தன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் அரச பங்காளிக்கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.
தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.