Date:

மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு பூர்த்தி நிகழ்வு (photos)

மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் பிரதான நிகழ்வு இன்றைய தினம் (06) நடைபெற்றது

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்

.

இந்த நிகழ்வின் போது பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு நூற்றாண்டு சிறப்பு சஞ்சிகையும் முத்திரையும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது .

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

‘கம்பஹா மாவட்டத்தில் பிரதான முஸ்லிம் கல்லூரியாக அல்முபாரக் தேசிய பாடசாலை திகழ்கின்றது .இனி இலங்கையிலும் பிரதான முஸ்லிம் பாடசாலையாக மாறுவதற்கான வேலைகளை தொடர்ந்து செயற்படுத்த வேண்டும் . இந்த பாடசாலை முழுமையாவதற்கு இன்னும் தேவையாக இருப்பது இந்த ஒன்றுகூடல் மண்டபம் மாத்திரம்தான் அதை நான் முழுமையாக பெற்றுத்தருகின்றேன் ‘ என ஜனாதிபதி உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்,கிராமப்புற விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் –  காதர் மஸ்தான் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த...