தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் லொறி ஒன்று மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலனிகம போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு லொறிகளும் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லொறி 3.9 கிலோமீற்றர் பகுதியில் சத்தம் கேட்டு வீதி ஓரத்தில் நிறுத்த முயற்சித்த போது பின்னால் பயணித்த மேலும் ஒரு லொறி அதன் மீது மோதியுள்ளது.
விபத்து இடம்பெற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அவசர மீட்பு அதிகாரிகள், லொறியில் சிக்கியிருந்த சாரதியை மீட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.